Posts

Showing posts from May, 2017

மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர்

Image
மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர் சுவடி மூலம் அருளிய பாடலை இப்போது காண்போம்: காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே... தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு... அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன் குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்... கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார் எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம் ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி... கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம் கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம் சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள் சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்... கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார் கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள் எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான் எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்... கு

சித்தர்கள் வகுத்த அறவியல் மற்றும் அறிவியல்

ஞானத்தலைவனும் ஞானபண்டிதனுமான முருகப்பெருமானின் சீடர்களான சித்தர்கள் வகுத்த அறவியல் மற்றும் அறிவியல்.  சித்தர் நூல்கள், சித்தர் பாடல்கள், சித்தர் மருத்துவம், சித்தர் வாக்குகள், சித்தரியல் ஒலி/ஒளி நாடாக்கள், ஓலைச்சுவடிகள், சீவநாதச் சுவடிகள் மற்றும் பல சித்தரியல் தகவல்களைப் பெற இணையுங்கள். 150,000+ Members Facebook group: Wisdom of Siddhas சித்தரியல் Click the link below & Join us @ Wisdom of Siddhas சித்தரியல் https://www.facebook.com/groups/siddhar.science Wisdom of Siddhas சித்தரியல் 300,000_ Members Facebook page: தமிழும் சித்தர்களும் Thamil.Siththars Click the link below & Join us @ தமிழும் சித்தர்களும் Thamil.Siththars https://www.facebook.com/Thamil.Siththars/ தமிழும் சித்தர்களும் Thamil.Siththars 199,000+ Members Facebook page: Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Click the link below & Join us @ Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.   https://www.facebook.com/Siddha.Med/ Ayurveda a

போகர்

Image
குரு : அகத்தியர் காலம் : 300 ஆண்டுகள், 18 நாட்கள் சீடர்கள் : கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர் சமாதி : பழனி இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார். நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார். “தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப மு