Posts

Showing posts from June, 2017

விஞ்ஞான தமிழ் மெஞ்ஞானம்..!

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்..! அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. -ஆசான் திருமூலர் திருமந்திரம்-2008 விஞ்ஞான நோக்கம்: ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி என்ற சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான்=> குவார்க்=> க்ளுவான்=>!!!???) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள்(Higgs boson)” எது என்ற சோதனை நடந்துவருகின்றது. செயல்படும் முறை: லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில்(வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படத் துகள்களையே ((ப்ரோட்டான்=>குவார்க்=>க் ளுவான்=>!!!???)) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள்துகள்(Higgs boson) ஏதுனும் வெளிப்படுகின்றாதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மெய்ஞ்ஞான நோக்கம்: அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில