'விதியை மதியால் வெல்லலாம்'
இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.
"வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி"
-ஆசான் வள்ளலார்
மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி"
-ஆசான் வள்ளலார்
மயில் என்பது இடகலை(இடது சுவாசம்), பின்கலை(வலது சுவாசம்) வழியாக ஓடும் காற்று(வாசி). குயில் என்பது இவ்வாசியானது சுழிமுனையில் வசப்படுவது. அப்போது 'வாசி'யாகியான காற்று 'சிவா'வாக மாறும். இவ்வாறு ஞானபண்டிதன் அருளாசியால் வாசி சுழிமுனையில் வசப்பட்டவர் பிறப்பு-இறப்பு எனும் கர்மச்சுழற்சியை வென்று இறையோடு இரண்டறக் கலப்பர்.
நன்றி!
Comments
Post a Comment