ஆசான் அகத்தீசர்

ஆசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார் அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான் அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார் அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும் அகத்தியரின் பொதிகையே மேருவாகும் அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும் அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ." - மகான் காகபுஜண்டர் காவியம் 1000 - பாடல் 7. மகான் காகபுசண்டர் அருளிய கவியின் விளக்கம்: உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்டி எழுப்பியவர்கள்தான் ஞானிகள்/ சித்தர்கள் ஆவர். அந்த வரிசையில் காகபுசண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். சதாரணமான மனிதர்ளுக்கு இதை நம்புவது கடினமாகவே இருக்கும். ஆசான் காகபுசண்டரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர். அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு ச...