மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர்

மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர் சுவடி மூலம் அருளிய பாடலை இப்போது காண்போம்: காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே... தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு... அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன் குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்... கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார் எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம் ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி... கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம் கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம் சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள் சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்... கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார் கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள் எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான் எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்... கு...